V4UMEDIA
HomeNewsKollywoodபிக் பாஸ்: முதலில் வெளியேறிய ஃபாத்திமா பாபு!!

பிக் பாஸ்: முதலில் வெளியேறிய ஃபாத்திமா பாபு!!

பிக் பாஸ் தற்போது தமிழில் சீசன் 3ல் அடியெடுத்துவைத்துள்ளது. இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியுள்ளார். இந்த சீசன் ஜூன் 23ந் தேதி முதல் ஒளிபரப்பப்படுகிறது.மிகவும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் பிக் பொஸ் நிகழ்ச்சியில், முதலில் இருந்து இந்த பிக் பாஸ் சீசன் இல் மீரா மிதுனும் மதுமிதாவையும் டார்கெட் செய்து வந்தனர்.

இந்நிலையில் இந்த வார எவிக்ஷனிற்கு பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களால் தேர்வு செய்யப்பட்டனர். இதில் ஏற்கனவே கேப்டன் ஆக இருக்கும் வனிதா மற்றும் தற்போதய தலைவர் மோகன் வைத்யா அவர்களை இந்த வார எலிமினேஷனில் தவிர மற்றவர்களை பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களா தேர்வு செய்யலாம் என பிக் பாஸ் அறிவித்ததும். அவரவர் எலிமினேஷனிற்கு இரண்டு நபர்களை தேர்வு செய்தனர்.இந்த எலிமிட்டின் பட்டியலில் மதுமிதா 6 வாக்குகளும், மீரா மிதுன் 8 வாக்குகளும், சாக்‌ஷி 2, கவின் 2 வாக்குகள், சரவணன் 2 வாக்குகள், சேரன் 2 வாக்குகள் மற்றும் ஃபாத்திமா பாபு 3 வாக்குகளும் பெற்றனர்.

Image result for fathima babu

இதன் முடிவில் மீரா மிதுன் தான் அதிக நபர்களால் தேர்வு செய்யப்பட்டிருந்தார் எனவே அவர் தான் வெளியேற்ற படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் மக்களின் ஆதரவை பொறுத்ததே வெளியேறுபவரை பிக் பாஸ் குழுவினர் தேர்வு செய்தனர். இந்நிலையில் மதுமிதா சனிக்கிழமை அன்று அதிக மக்கள் ஆதரவினால் வெளியேறும் நபர்களில் இருந்து நீக்கப்பட்டார்.

இதை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை, கமல் அவர்கள் வேற்றப்படாமல் பாதுகாக்கப்பட்டவர்களை ஒன்றன்பின் ஒன்றாக அறிவித்தார், இதில் எஞ்சியது ஃபாத்திமா பாபு மட்டுமே. 

Image result for fathima babu evicted in bigg boss

ஃபாத்திமா பாபு வெளியேறியதும் கமல் அவர்களை நேரில் சந்தித்தார். பின், கமல் ஹாசனிடம் பேசிய அவர், பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்த அனுபவம் பற்றி விவரித்தார். தனது குடுபத்தினை கமலிற்கு ஃபாத்திமா பாபு அறிமுகம் செய்தார்.கமலா அவர்கள் பிக் பாஸ் வீட்டினுள் இருப்பவர்களை பற்றி கேட்ட போது, ஃபாத்திமா, தர்ஷன், லோஸ்லியா எப்போதும் தனித்து இருப்பர். அபிராமி, சாக்‌ஷி, ரேஷ்மா, ஷெரின் ஒரே கூட்டணி. சரவணன், கவின், சாண்டி அவரவர் வேலையை மட்டும் பார்க்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

இறுதியில், தர்ஷன் இறுதி வரை இருக்க வேண்டும் என்று கூறி மற்ற போட்டியாளர்களுக்கு வாழ்த்து கூறி வீட்டை விட்டு வெளியேறினார்.

Most Popular

Recent Comments