‘7ஆம் அறிவு’ படங்களின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஸ்ருதிஹாசன் இவர் இதை தொடர்ந்து “3, பூஜை, வேதாளம், சிங்கம் 3 நடித்துள்ளார். இந்த நடிகை தற்போது எஸ்பி ஜனநாதனின் ‘லாபம்’ படத்தில் பிஸியாக இருக்கிறார்.
ஒரு தீவிர ரசிகர் ஸ்ருதியிடம் திருமணத்திற்கு தங்களை அழைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.மேலும் அவர்கள் , “உங்கள் திருமணத்தன்று உங்கள் சிறப்பு ரசிகர்களை மட்டும் அழைக்க வேண்டும் ” என பதிவிட்டிருந்தனர்.
சமூக ஊடகங்களில் சூப்பர் ஆக்டிவ் ஆன ஸ்ருதி, இந்த ரசிகனின் டுவீட்டுக்கு பதிலளித்துள்ளார், “நீங்கள் அதற்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டும், எனவே நாம் ஒன்றாக என்னுடைய பிறந்தநாளை கொண்டாடுவோம் ” என கூறினார்.