Home News சாஹோ படத்தின் ‘காதல் சைக்கோ” பாடலின் டீஸர் வெளியீடு!!

சாஹோ படத்தின் ‘காதல் சைக்கோ” பாடலின் டீஸர் வெளியீடு!!

பிரபாஸ்-ஷ்ரத்தா கபூர் நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் ‘சாஹோ’. இந்த படத்தின் டீஸர் வெளிவந்து மக்களின் வரவேற்பை பெற்றது. இந்த படத்தை சுஜித் இயக்குகிறார். வம்சி மற்றும் ப்ரமோட் இந்த படத்தை தயாரிக்கின்றனர். ஸ்ரீகர் பிரசாத் இந்த படத்திற்கு எடிட்டிங் செய்துள்ளார். இந்த படத்தின் பாடலான ‘காதல் சைக்கோ’ பாடலின் டீஸர் வெளியிட்டுள்ளனர்.
இந்த பாடலை தவானி பானுஷாலி பாடியுள்ளார் மற்றும் தனிஷ்க் பாக்சி இசையமைத்து எழுதியுள்ளார். மேலும், கூடுதல் பாடல் வரிகளை மதன் கார்க்கி எழுதியுள்ளார். இந்த படத்தின் முழு பாடல் ஜூலை 8ஆம் தேடி வெளியிடுகின்றனர்.



Image result for saaho movie kadhal psycho



புகழ்பெற்ற இந்திய படமான சாஹோவில் ஜாக்கி ஷிராஃப், நீல் நிதின் முகேஷ், வெண்ணிலா கிஷோர், முரளி சர்மா, அருண் விஜய், பிரகாஷ் பெலவாடி, ஈவ்லின் சர்மா, சுப்ரீத், லால், சங்கி பாண்டே, மந்திரா பேடி, மகேஷ் மஞ்ச்ரேகர், டினு ஆனந்த் ஆகியோர் நடித்துள்ளனர். சாஹோ ஒரே நேரத்தில் 4 மொழிகளில் உருவாக்கப்படுகிறது – இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம்.