சூர்யாவின் தெலுங்கு பட தலைப்பு!!
நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளிவர இருக்கும் படம் ‘காப்பான்’ (தமிழ் தலைப்பு). இந்த படத்தின் டீசர் 13மில்லியன் வியூஸை அள்ளியுள்ளது, இது ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படம், இந்த படம் தெலுங்கிலும் வெளியிடுகின்றனர். இந்த படத்தின் தெலுங்கு தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக்கை ஜூன் 27 அன்று வியாழக்கிழமை காலை 10:30 மணிக்கு எஸ்.எஸ்.ராஜமௌலி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
சூர்யாவின் காப்பான் படத்திற்கு தெலுங்கில் ‘பந்தோபஸ்து’ என தலைப்பிட்டுள்ளனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் தெலுங்கு ரசிகர்களிடம் மாபெரும் வரவேப்பை பெற்றுள்ளது. இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
கே.வி. ஆனந்த் இயக்கியுள்ள இந்த படம் அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் சூர்யா கமாண்டோவாக நடிக்கிறார். ‘மலையாள நடிகர் மோகன்லால் பிரதமராக நடிக்கிறார், ஆர்யா, சயீஷா மற்றும் பூர்னா ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.பாலிவுட் நடிகர் போமன் இரானி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதிய இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.