Review By :- v4u media
Release Date :- 27/06/2019
Movie Run Time :- 2.11 Hrs
Censor certificate :- U/A
Production :- Vansan Movies – K Productions
Director :- S U Arun Kumar
Music Director :- Yuvan
Cast :- Vijay Sethupathi , Anjali, Vivek Prasanna , Linga , Surya Vijay Sethupathi
விஜய் சேதுபதி, அஞ்சலி நடிப்பில் வெளியாகியுள்ள படம் சிந்துபாத்.
விஜய் சேதுபதி ஊரில் அனைவரும் அறிந்த திருடன். அவருடன் சூர்யா என குட்டிபையன் அவரின் ஆதரவாக இருந்துவருகிறார். இவர் வேறு யாருமல்ல அவரின் நிஜ மகன். சேதுபதிக்கு காதில் வேறு சற்று பிரச்சனை. ஏதோ ஒரு பிழைப்பு, ஏதோ ஒரு வாழ்க்கை என இருந்தாலும் ஜாலியாக ஓட்டிகொண்டிருக்கிறார்.
அதே ஊரில் சாதாரண குடும்பத்து பெண்ணாக அஞ்சலி. ஒருநாள் இவரை ஏதேச்சையாக சேதுபது பார்த்துவிட காதல் வயப்படுகிறார்.
இப்படியிருக்க எப்படியோ ஒருவழியாக இவரும் அவரின் பால் காதலில் விழுகிறார். இதற்கிடையில் வேலைக்காக தாய்லாந்து செல்கிறார். அங்கு ஒரு பெரும் சமூக விரோத சம்பவமே நடைபெறுகிறது.
அஞ்சலி அதில் சிக்க விசயம் தெரிந்து அதிர்ச்சியான விஜய் சேதுபதி அவர் இருக்கும் இடத்தை தேடி பயணப்படுகிறார். அங்கு இவரும் வேறொரு பிரச்சனையில் மாட்டிக்கொள்ள இருவரும் போன காதலி என்ன ஆனார், என்ன பிரச்சனை, சமூக நீதி கிடைத்ததா, வாழ்க்கையில் இருவரும் இணைந்தார்களா என்பதே இந்த சிந்துபாத்.
விஜய் சேதுபதி எப்போதும் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர். அப்படியானவருக்கு கையில் சிக்கியது இந்த சிந்துபாத். படத்திற்கு படம் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தும் அவர் இந்த படத்திலும் காட்டியுள்ளார். காது கேளாமை என்றாலும் அவரின் செய்கை, நடந்துகொள்ளும் விதம் அசத்தியிருக்கிறார் ,
அவருடன் இப்படத்தின் மூலம் அவரின் மகனும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார். அப்பாவை போல பிள்ளை என்பது சரியாக தான் இருக்கிறது. சிறு பையன் என்றாலும் நடிப்பை உள்வாங்கி அருமையாக நடித்துள்ளார்.
இவர்களோடு பலரும் அறிந்த விவேக் பிரசன்னா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். படத்தின் இயக்குனர் அருண் குமார் சிந்துபாத் மூலம் நவீன அழகு மருத்துவம் என்ற பெயரில் உலகளவில் நடக்கும் பெரும் அநியாயத்தை வெளிச்சம் போட்டு காட்டி மக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்.
தாய்லாந்து, தென்காசி என ஒளிப்பதிவாளர் காட்சிகளை படம் பிடித்த விதம் இயற்கையாக அமைந்துள்ளது படத்திற்கு கூடுதல் பலம்.
யுவனின் இசை படத்தின் ஓப்பனிங் தீம் மூலம் எண்ட் வரை கதைக்கு பொருத்தமான உணர்வுகளை தருகிறது. பாடல்களும் ஓகே..
கொஞ்சம் விழிப்புணர்வு கருத்துடன் வழக்கமான விஜய் சேதுபதி படம்.