Home Review Jiivi Review

Jiivi Review

Review By :- v4u media

Release Date :- 28/06/2019

Movie Run Time :- 1.54 Hrs

Censor certificate :- U

Production :- M.Vellapandian

Director :- VJ Gopinath

Music Director :- K S Sundaramurthy

Cast :- Vetri, Karunakaran, Rohini and Mime Gopi

ஜீவி விமர்சனம்

விஜே கோபிநாத் இயக்கத்தில் வெற்றி கருணாகரன் நடித்திருக்கும் திரைப்படம் ஜீவி. இப்படம் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் சினிமாவில் கமர்ஷியல் படங்களும், காதல் படங்களும் வெளிவருவது அதிகம், அதில் ஒரு சில படைகளின் கதையும், திரைக்கதையும் ஆச்சரியப்பட வைக்கும். அப்படி ஆச்சரியப்பட வைக்கும் திரைப்படம் தான் ஜீவி. சொந்த ஊரில் கம்பீரமாக சுற்றி திரிந்த வெற்றி சென்னையில் டீக்கடையில் ஜூஸ் போடும் வேலை செய்கிறார். அதே கடையில் வேலை செய்கிறார் கருணாகரன். 

வெற்றி காதலிக்கும் பெண்ணுக்கு பணம் தான் முக்கியம் .காதலிக்கும் பெண் பணம் தான் பெறிது என்று விட்டு பிரிந்ததால் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க நினைக்கிறார் வெற்றி. அவர் பணம் சம்பாதிக்க தேர்ந்தெடுப்பது திருட்டு. வெற்றி தங்கி இருக்கும் வீட்டின் ஓனரான ரோகிணி தன் மகள் திருமணத்திற்காக சேர்த்துவைத்த நகைகளை திருட திட்டமிடுகின்றனர். திட்டமிட்டபடியே நகைகளை திருடுகின்றனர். போலீஸிடம் மாட்டாமல் இருக்க பல திட்டங்களை தீட்டுகிறார் வெற்றி . இருப்பினும் ஒரு கட்டத்தில் திருடிய நகைகளை திருப்பி கொடுத்து விடலாமா என்று யோசிக்கின்றனர். 

அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் முழு கதை. கே எஸ் சுந்தரமூர்த்தியின் பின்னணி இசை படத்திற்கு பக்கபலமாக உள்ளது .இயக்குனரின் எண்ணங்களை சரியாக தொகுத்துயிருக்கிறார் படத்தொகுப்பாளர் கே எல் பிரவீன். இயக்குநர் V.J.கோபிநாத் கடைசி வரை சுவாரசியத்தை தக்கவைப்பதில்தான் படத்தின் சூட்சமப்புள்ளி இயங்குகிறது. படத்தின் கதை வித்தியாசமாக, அடப் போட வைக்கும்படி இருந்தாலும், திரைக்கதை அதற்கான நியாயத்தைச் செய்யவில்லை. ஏனெனில், கதாபாத்திரங்களை மேலோட்டமாக உருவாக்கி, வசனங்கள் மூலமே படத்தைச் சாமர்த்தியமாக நகர்த்தியுள்ளதே காரணம்.

REVIEW OVERVIEW
v4umedia
Previous articleOviya’s Re-entry in Malayalam film After 8 Years
Next articleDharmaprabhu Review
jiivi-review-2 Review By :- v4u media Release Date :- 28/06/2019 Movie Run Time :- 1.54 Hrs Censor certificate :- U Production :- M.Vellapandian Director :- VJ Gopinath Music Director :- K S Sundaramurthy Cast :- Vetri, Karunakaran, Rohini and Mime Gopi ஜீவி விமர்சனம்விஜே கோபிநாத் இயக்கத்தில் வெற்றி...