8 ஆண்டுகளுக்கு பின் மலையாளத்தில் ஓவியா ரீ-என்ட்ரி !
களவாணி படத்தில் கதாநாயகியாக அறிமுகமான நடிகை ஓவியா, இரண்டு வருடங்களுக்கு முன்பு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார் .
இந்தநிலையில் அவர் நடித்துள்ள களவாணி 2 படத்தின் ரிலீசுக்காக ஓவியா காத்திருக்கிறார் .தற்போது ஓவியாவிற்கு மலையாள திரையுலகில் இருந்து ஒரு பட வாய்ப்பு வந்துள்ளது. சில வருடங்களுக்கு முன்பு மிகப்பெரிய அளவிவில் வெற்றி மற்றும் வரவேற்பு பெட்ரா சால்ட் அண்ட் பெப்பர் படத்தின் இரண்டாம் பாகமான பிளாக் காபி படத்தில் மிக முக்கிய வேடத்தில் ஓவியா நடிக்கிறார்.
நேற்று வெளியான இந்தப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் இதை உறுதிப்படுத்தியுள்ளது. மலையாளம் தன் தாய்மொழி என்றாலும் ஓவியா கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மலையாளத்தில் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார். எட்டு வருடத்திற்கு முன்பு ஓவியா நடித்த மனுஷ்ய மிருகம் படத்தை இயக்கிய பாபுராஜ் தான், இந்த பிளாக் காபி படத்திலும் இவருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.