விரும்புவது: ஒன்லி பியூர் வெஜ். அம்மாவின் சமையலில் உருளைக்கிழங்கு பொரியலும், பூண்டுக்குழம்பும் பிடிக்கும்.
வழக்கம் : வருடத்திற்கு ஒரு முறை தேனி சங்கராபுரத்தில் உள்ள கருப்புசாமி கோயிலுக்கு பேமிலியோடு செல்வது.
வீட்டில் இருந்தால்: லிங்கா, யாத்ரா மற்றும் அக்கா குழந்தைகளுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவது.
காரில் கேட்பது: இளையராஜா பாடல்கள், கவுண்டமணி காமெடிகள்.
ஸ்போர்ட்ஸ்: டென்னிஸ், ஸ்னூக்கர், கால்பந்து.
எப்போதும் முணுமுணுப்பது: ஓம் நமச்சிவாய…
ஷூட்டிங் இல்லாதபோது: ஸ்கிரிப்ட்/ பாடல்கள் எழுதுவது.
வெறுப்பது: டிராவல், ‘போரிங்’.
மொபைல் ஸ்க்ரீன் சேவர்: சிவபெருமான்.
வாகனம்: ஜாகுவார், ரோல்ஸ் ராயல்ஸ்.
மொபைல் மாடல்: ஐபோன் எக்ஸ்ஆர்
அடிக்கடி சொல்லும் வார்த்தை: பாசிட்டிவ்வா பேசுவோம்!
குட் ஹேபிட்: புக்ஸ் படிப்பது. அதுவும் ஓரம் கசங்காமல், மடிக்காமல், காதலியை பராமரிப்பது போல் புக்ஸை பாதுகாப்பார்.
Credits: Kungumam