HomeNewsKollywoodலாபம் படத்தில் விஜய்சேதுபதியின் பக்கிரி தோற்றம் !

லாபம் படத்தில் விஜய்சேதுபதியின் பக்கிரி தோற்றம் !

இயக்குனர் எஸ்பி.ஜனநாதன் இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன்பு வெளியான புறம்போக்கு என்னும் படத்தில் கதாநாயகனாக நடித்த விஜய் சேதுபதி, அதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் அவரது இயக்கத்தில் லாபம் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன், கதாநாயகியாக நடிக்க முக்கிய வேடத்தில் கலையரசன் நடிக்கிறார். படத்தில் வில்லனாக நடிகர் ஜெகபதிபாபு நடிக்கிறார்.

இந்த படத்தில் விஜய்சேதுபதி பக்கிரி என்கிற கதாபாத்திரத்தில் விவசாயிகள் சங்க தலைவராக, விவசாயிகளுக்காக குரல் கொடுப்பவராக நடித்து வருகிறார். படத்தில் அவருக்கு பலவிதமான கெட்டப்புகள் இருக்கின்றன. அதில் தாடி மீசையுடன் பெயருக்கேற்றபடி ஒரு பக்கிரி போல விஜய்சேதுபதி தோன்றும் ஒரு கெட்டப் தற்போது வெளியாகியுள்ளது.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments