தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர் யோகி பாபு. இவரது கால்ஷீட்டை வாங்குவது தான் இன்றைக்கு மிகவும் கடினம். தான் கஷ்டப்பட்டு உழைத்து கட்டிய வீட்டின் கிரகப்பிரவேசத்துக்கு கூட போக நேரம் இல்லாமல் பிஸியாக நடித்து கொண்டிருப்பார். தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து வருகிறார்.
ஷக்தி சிவன் இயக்கி நடித்துள்ள படம் தௌலத். இப்படத்தில் ராஷ்மி கவுதம், ஜெயபாலன், அஜய் பிரபு என பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் போஸ்டர் நேற்று வெளியானது. போஸ்டரில் நடிகர் யோகி பாபு இருப்பது போன்று டிசைன் செய்யப்பட்டுள்ளது. இதனால் இப்படத்தில் அவரும் நடிக்கிறார் என்ற தகவல் வெளியானது.
இந்நிலையில் நடிகர் யோகி பாபு தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த படம் குறித்து ட்வீட் ஒன்று செய்துள்ளார். அதில் “இன்று இந்த படத்தின் விளம்பரம் பார்த்தேன். எனக்கும் ‘தெளலத்’ படத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிவுட்டுள்ளார்.
இன்று இந்த விளம்பரம் பார்த்தேன். எனக்கும் ’தெளலத்’ படத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை எனத் தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/cJTJAulEbk— Yogi Babu (@iYogiBabu) August 12, 2020