V4UMEDIA
HomeNewsKollywoodசிவகார்த்திகேயனின் "வாழ்" படத்திலிருந்து முதல் சிங்கிள் வெளியானது !!

சிவகார்த்திகேயனின் “வாழ்” படத்திலிருந்து முதல் சிங்கிள் வெளியானது !!

விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக அறிமுகமாகி பின் “மெரினா” திரைப்படம் மூலம் திரைத்துறையில் நுழைந்து நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என பல துறைகளில் பிரபலமானவர் சிவகார்த்திகேயன்.

கடந்த 2019ம் ஆண்டு வெளிவந்த கனா படத்தின் மூலமாகத் தயாரிப்பாளராக அறிமுகமானார். அந்தப் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ப்ளேக்சிப் யூடியூப் பிரபலங்கள் நடித்த நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தைத் தயாரித்தார்.

The Next Big Thing In Tamil Cinema: Sivakarthikeyan - BookMyShow

மேலும் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கும் ‘வாழ்’ படத்தையும் தயாரித்து வருகிறார்.

‘ஆஹா’ என்னும் இந்தப் பாடல் பிரதீப் குமார் இசையில் இன்று சோனி மியூசிக் யூடியூப் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

பிரதீப் குமார், அருண் பிரசாத் புருஷோத்தமன், குட்டி ரேவதி இணைந்து எழுதியுள்ள இந்த பாடலை பிரதீப் குமார் பாடியுள்ளார்.
” கனா. பொங்கி ஓடுதே.
தேன். மழை பொழிந்ததே.
பூ. அதை ருசித்ததே.
ஆஹா. மறந்தேன்.
பார் எனைக் கவர்ந்ததே.
வெண்ணிலா சிரித்ததே.
ஆஹா. மெய் மறந்தேன். மெய் உணர்ந்தேன்.” என்ற வரிகளை கொண்ட இந்த பாடல் மிகவும் மென்மையாக உள்ளது.

Most Popular

Recent Comments