என்னை நம்பி இருப்பவர்களுக்காக படப்பிடிப்புக்கு செல்கிறேன் – நடிகர் விஜய் ஆண்டனி !
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் சினிமா துறை முடங்கி பல மாதங்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், சினிமா மற்றும் அதை நம்பி உள்ள நடிகர்கள், தொழிலாளர்கள், தினசரி வேலையாட்கள் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர்.
தற்போது 75 நபர்களுடன் சினிமா படப்பிடிப்பு நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. பல படங்கள் பாதியில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் இந்த அறிவிப்பு சினிமாத் துறையினரிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய் ஆண்டனி தற்போது சரியான பாதுகாப்புடன் படப்பிடிப்பில் கலந்துகொள்ளப் போவதாகத் தெரிவித்துள்ளார். விஜய் ஆண்டனி எப்போது தயாரிப்பாளர்களின் நிலை அறிந்து செயல்படுபவர் எ பேசப்படுகிறது. ஏற்கனவே தனது சம்பளத்தில் குறிப்பிட்ட சதவீதத்தைக் தயாரிப்பாளர் நலன் கருதி குறைத்து கொண்டார்.
தற்போது அவரது ட்விட்டர் பக்கத்தில் “என்னை நம்பி, என்னை வைத்து படம் தயாரித்துக் கொண்டிருக்கும் என் தயாரிப்பாளர்களுக்காகவும், என் இயக்குனர்களுக்காகவும் மற்றும் FEFSI தொழிலாளிகளுக்காகவும் நாளை முதல் சரியான பாதுகாப்புடன், நான் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளேன். நம்பிக்கையுடன் நான்” என தெரிவித்துள்ளார்.