அட்டக்கத்தி தினேஷ் நடித்த ‘திருடன் போலீஸ்’ இயக்கிய இயக்குனர் கார்த்திக் ராஜூ, தற்போது ரெஜினா காஸென்றா நடித்துள்ள ‘சூர்ப்பநகை’ படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில் கார்த்திக் ராஜு இயக்கும் அடுத்த படம் குறித்த தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என 5 மொழிகளிலும் உருவாகும் இப்படத்தில் “பியர் பிரேமா காதல்” ரைசா வில்சன் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். மேலும் இந்த படத்தில் ஹரிஷ் உத்தமன், பால சரவணன், காளி வெங்கட் என பலர் நடிக்கவுள்ளனர்.
பிரபல ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவில் சாம் சிஎஸ் இசையில் உருவாகும் இந்த படத்தின் டைட்டில் போஸ்டரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்கள் தமிழில் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான “சினிமா வாலா” சதீஷ் இப்படத்தின் ப்ரொஜெக்ட் டிசைனர் ஆவார்.
மிக குறுகிய காலத்திலேயே படத்தின் மொத்த படபிடிப்பையும் முடித்து விட்டனர். படப்பிடிப்பு மட்டுமின்றி டப்பிங், எடிட்டிங் என போஸ்ட் ப்ரோடுக்ஷன் வேலைகளும் அசுர வேகத்தில் முடித்து விட்டனர். மிக சிறிய நேரத்தில் படத்தினை முடித்து ரிலீஸ் க்கு தயார் நிலையில் உள்ளது ஒட்டுமொத்த திரை உலகினரையும் ஆச்சராயத்தில் ஆழ்த்தியுள்ளது. விரைவில் படத்தினை திரையில் காணலாம்.