V4UMEDIA
HomeNewsKollywood"பிக் பாஸ்" லாஸ்லியாவின் அடுத்த படம் குறித்த அப்டேட் !

“பிக் பாஸ்” லாஸ்லியாவின் அடுத்த படம் குறித்த அப்டேட் !

பிக்பாஸ் புகழ் “லாஸ்லியா” அறிமுகமாகும் படம் “ஃப்ரெண்ட்ஷிப்” . லாஸ்லியாவிற்கு இது தான் முதல் படம். ஃப்ரெண்ட்ஷிப் படத்தினை தொடர்ந்து புதிய படத்தில் கமிட் ஆகியுள்ளார் லாஸ்லியா.

தில்லி பாபுவின் ஆக்ஸ்ஸ் பிலிம் ஃபேக்டரி நிறுவனம் தனது அடுத்தப் படத்திற்கான அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. உறுமீன், மரகத நாணயம், ராட்சசன் என பல தரமான வெற்றி திரைப்படங்களைத் தயாரித்துள்ளார் தில்லி பாபு. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் காதலர் தினத்தில் இவரின் தயாரிப்பில் ‘ஓ மை கடவுளே’ திரைப்படம் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது.

Image

ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் வித்தியாசமான பல புதியத் திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டு வருகிறது. இதற்கிடையே தனது பத்தாவது திரைப்படத்திற்கான அறிவிப்பை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

இப்படத்தில் கே.பூர்னேஷன் கதாராயகனாகவும், பிக் பாஸ் புகழ் லொஸ்லியா கதாநாயகியாகவும் நடிக்கவுள்ளனர். அறிமுக இயக்குநர் ஜே.எம். ராஜா சரவணனின் எழுத்து இயக்கத்தில் உருவாக இருக்கிறது இந்தப் படம். மேலும் விரைவில் இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் பற்றிய தகவல்களும், படத்தின் பெயரும் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Most Popular

Recent Comments