போதை பொருள் சர்ச்சையில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் சிக்கி இருக்கிறார்.மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் காதலி ரியா சக்ரபர்த்தி போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு NCB (Narcotics Control Bureau) விசாரணையில் இருந்து வரும் இந்த நிலையில் மேலும் பல பாலிவுட் பிரபலங்கள் இந்த சர்ச்சையில் சிக்கி வருகிறார்கள்.
விசாரணையில் ரியா சில நடிகர் நடிகைகளின் பெயர்களை கூறியதாகவும் சில நாட்களுக்கு முன்பு தகவல் பரவியது. அதில் நடிகைகள் சாரா அலி கான், ரகுல் பிரீத் சிங் உள்ளிட்ட பலரது பெயர்கள் இருப்பதாகவும் கூறப்பட்டது. அதனால் அவர்களும் விசாரணைக்காக அழைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது போதைப்பொருள் சர்ச்சையில் தீபிகா படுகோன் பெயரும் சிக்கியிருக்கிறது.
ஒரு வாட்ஸ்அப் உரையாடலில் அவர் மால் போன்ற விஷயங்கள் K என்ற நபரிடமிருந்து கேட்டிருக்கிறார் என தகவல் பரவியிருக்கிறது. 2017ல் நடந்த இந்த உரையாடலில் தீபிகா இது பற்றி கேட்டபோது K என்ற நபர் ‘என்னிடம் இருக்கிறது .ஆனால் அது வீட்டில் உள்ளது.. நான் பாந்த்ராவில் இருக்கிறேன்’ என பதில் அளித்துள்ளார்.
K என்ற நபர் தீபிகாவின் மேனேஜர் கரிஷ்மா என கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரிக்க தீபிகா படுகோன் மேனேஜர் கரிஷ்மா பிரகாஷுக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது என தெரிகிறது. விரைவில் தீபிகா படுகோனுக்கும் NCB சம்மன் அனுப்ப தயாராகி வருகிறது என தெரிகிறது.
மேலும் சாரா அலி கான் மற்றும் ஷ்ரத்தா கபூர் ஆகியோர் புனே அருகில் உள்ள ஒரு தீவுக்கு அடிக்கடி பார்ட்டிக்கு சுஷாந்த் சிங் உடன் சென்றது தெரியவந்திருப்பதாவும், அது பற்றி அவர்களிடமும் விசாரணை நடத்துவதற்காக சம்மன் அனுப்பப்பட உள்ளது.
அது மட்டும் இன்றி சாரா அலி கான், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோரின் பெயர்கள் இந்த சர்ச்சையில் ஏற்கனவே சிக்கி இருக்கும் சூழலில், அவர்களிடமும் விசாரணை நடக்க உள்ளது
இந்நிலையில் தீபிகா படுகோனை கங்கனா ரணாவத் ட்விட்டரில் விமர்சனம் ஒன்றை பதிவிட்டுள்ளார் .தான் மனஅழுத்ததால் பாதிக்கப்பட்டு இருந்தததாக தீபிகா இதற்கு முன்பே கூறி இருக்கும் நிலையில் அதை குறிப்பிட்டு கங்கனா விமர்சித்துள்ளார்.
Repeat after me, depression is a consequence of drug abuse. So called high society rich star children who claim to be classy and have a good upbringing ask their manager ,” MAAL HAI KYA?” #boycottBollywoodDruggies #DeepikaPadukone https://t.co/o9OZ7dUsfG
— Kangana Ranaut (@KanganaTeam) September 21, 2020
“போதை பொருள் பயன்படுத்தினால் மன அழுத்தம் வரத்தான் செய்யும். சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருக்கும் இந்த ஸ்டார் குழந்தைகள், க்ளாசி மற்றும் நல்ல முறையில் வளர்க்கப்பட்டு இருப்பதால் அவர்களது மேனேஜர் இடம் ‘MAAL HAI KYA?’ என கேட்பார்கள். #boycottBollywoodDruggies #DeepikaPadukone” என கங்கனா கூறி உள்ளார்.