V4UMEDIA
HomeNewsKollywoodஎனது பெயரை தவறாக பயன்படுத்த கூடாது - நடிகர் அஜித்குமார் அறிக்கை !

எனது பெயரை தவறாக பயன்படுத்த கூடாது – நடிகர் அஜித்குமார் அறிக்கை !

நடிகர் அஜித் பெயர் தவறாக எப்போதுலாம் தவறாக பயன்படுத்தப்படுமோ அப்போது அவர் ஏதும் கூறாமல் அதற்கும் ஒரு வழக்கறிஞர் மூலம் சட்ட அறிக்கை ஒன்றை வெளியிடுவார் என்பது நாம் அனைவரும் தெரிந்ததே. தமிழ் சினிமா மட்டுமின்றி இந்தியா சினிமாவிலே வழக்கறிஞர் மூலம் அறிக்கை விடும் ஒரே நடிகர் நம் அஜித் தான். அந்த வகையில் நேற்று (செப்டம்பர் 17) அவரது வழக்கறிஞர் வெளியிட்டுள்ள சட்ட அறிக்கை சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த சட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:

“இந்த அறிக்கை நாங்கள்‌ எங்கள்‌ கட்சிக்காரர்‌ திரு. அஜித்‌ குமார்‌ சார்பாக, கொடுக்கும்‌ சட்ட அறிக்கை ஆகும்‌. சமீப காலமாக ஒருசில தனி நபர்கள்‌ பொது வெளியில்‌ என்‌ கட்சிகாரர்‌ சார்பாகவோ, அல்லது அவரது பிரதிநிதி போலவோ என்‌ கட்சிக்காரர் அனுமயின்றி. தங்களை முன்னிலைப்படுத்தி வருவதாக சில சம்பவங்கள்‌ என்‌ கட்சிகாரர்‌ கவனத்துக்கு வந்துள்ளது.

தல பெயரில் நடக்கும் மோசடி வேலைகள்.. அஜித் வெளியிட்ட அதிரடி அறிக்கை - முழு  விவரம் இதோ.!! - Tamilstar

இதை முன்னிட்டு என்‌ கட்சிகாரர்‌ தன்னுடன்‌ பல வருடங்களாக பணியாற்றி வரும்‌ அவரது மேலாளர்‌ திரு சுரேஷ் சந்திரா அவர்கள் மட்டுமே தன்னுடைய அனுமதி பெற்ற தன்‌ பிரதிநிதி என்றும்‌ அவர்‌ மட்டுமே தன்னுடைய சமூக மற்றும்‌ தொழில்‌ ரீதியான நிர்வாகி என்றும் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

மேலும்‌ தன்னுடைய பெயரை பயன்படுத்‌தி எந்த ஒரு தனி நபரோ, நிறுவனமோ யாரேனும் அணுகினால்‌ அந்த தகவலை திரு சுரேஷ் சந்திரா அவர்களிடம்‌ உடனடியாக தெரிவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இதை மீறி இத்தகைய நபர்களிடம்‌ தன்‌ சம்பந்தமாக யாரும்‌ தொழில்‌ மற்றும்‌ வர்த்தக ரீதியாக தொடர்பில்‌ இருந்தால்‌, அதனால்‌ ஏதேனும்‌ பாதகம்‌ ஏற்பட்டால்‌ அதற்கு என்‌ கட்சிகாரர்‌ எந்த விதத்திலும்‌ பொறுப்பு இல்லை என்று அறிவப்பதோடு, பொது, மக்களும்‌, இத்தகைய நபர்களிடம்‌ எச்சரிக்கையாக இருக்கும்‌ படி கேட்டுக்‌ கொள்கிறார்” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Popular

Recent Comments