நடிகர் பரத் மற்றும் பிரியா பவானி ஷங்கர் நடிக்கும் புதிய வெப் சீரிஸின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியானது.
ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் இளைஞர் ஒருவர், டைம் ட்ராவல் செய்யும் சக நண்பர்களுடன் சேர்ந்து ஒரு பெரும் பிரச்சனையில் சிக்கிக்கொள்கிறார். பின்னர் அதிலிருந்து எப்படி மீள்கிறார் என்பதே கதை. இந்த வெப் சீரிஸிற்கு “டைம் என்ன பாஸ்” என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்த வெப் சீரிஸில் பரத், ப்ரியா பவானி ஷங்கர், அலெக்சாண்டர் பாபு, கருணாகரன், ரோபோ சங்கர் மற்றும் சஞ்சனா சாரதி என பலர் நடித்துள்ளனர்.இந்த வெப் சீரிஸை கவிதாலயா புரொடக்சன்ஸ் சார்பில் புஷ்பா கந்தசாமி தயாரித்துள்ளார்.
‘டைம் என்ன பாஸ்’ அமேசான் ப்ரைம் தளத்தில் வரும் செப்டம்பர் 18ம் தேதி முதல் ஒளிபரப்பாகஉள்ளது. வெப் சீரிஸின் ட்ரைலர் நாளை வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.