V4UMEDIA
HomeNewsKollywoodவடிவேல் பாலாஜி குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்ற சிவகார்த்திகேயன் !

வடிவேல் பாலாஜி குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்ற சிவகார்த்திகேயன் !

பிரபல தனியார் தொலைக்காட்சி யின் “கலக்கப்போவது யாரு” நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகர் வடிவேல் பாலாஜி. இவருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன் திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற வசதி இல்லாததால் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்கு மாற்றப்பட்டார்.

Sivakarthikeyan Salary, Net Worth, Remuneration Per Movie

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று ( செப்டம்பர் 11 ) மருத்துவமனையிலே இறந்தார். அவரது மறைவுக்கு அவரின் சக சின்னத்திரை கலைஞர்கள் அஞ்சலியை செலுத்தினர். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன், வடிவேல் பாலாஜியின் திடீர் மரணம் பற்றி வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும், வடிவேல் பாலாஜிக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் அவர்களது முழு படிப்பு செலவையும் தான் ஏற்று கொள்வதாகவும் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

Most Popular

Recent Comments