V4UMEDIA
HomeNewsKollywoodநடிகை ஸ்ரேயா சரண் நடிக்கும் “கமனம்” பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட பிரபல இயக்குனர்...

நடிகை ஸ்ரேயா சரண் நடிக்கும் “கமனம்” பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட பிரபல இயக்குனர் !

நடிகை ஸ்ரேயா சரண் நடிப்பில் பல்வேறு மொழிகளில் உருவாகும் “கமனம்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட இயக்குனர் கிரிஷ் 

இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்!கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக சினிமாவுலகில் வசீகர முகத்தாலும், காந்த பார்வை கொண்ட கண்களாலும், தனித்துவமிக்க நடிப்பாலும் முன்னனி நடிகையாக திகழ்ந்து வந்த நடிகை ஸ்ரேயா சரண் சிறிய இடைவெளிக்கு பின் மீண்டும் தனது திரையுலக பயணத்தை தொடங்கிவிட்டார்.

இயக்குனர் சுஜனா ராவ் இயக்கத்தில் உருவாகும் “கமனம்” படத்தில் நடிகை ஸ்ரேயா சரண் நாயகியாக நடித்துள்ளார். நிஜ வாழ்வின் எதார்த்தங்களும் நிகழ்வுகளும் கொண்ட கதையாக “கமனம்” படம் உருவாகுகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் இப்படம் தயாராகிறது.

நடிகை ஸ்ரேயா சரணை தனது படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவைத்த பிரபல இயக்குனர் கிரிஷ் “கமனம்” படத்தின் முதல் பார்வை போஸ்டரை நடிகை ஸ்ரேயா சரணின் பிறந்த நாளான இன்று வெளியிட்டார்.
இசைஞானி இளையராஜா இசையமைக்க, பிரபல எழுத்தாளர் சாய் மாதவ் புர்ரா வசனங்களை எழுதியுள்ளார்.

ஞான சேகர் V.S இப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்வதோடு மட்டுமில்லாமல் ரமேஷ் கருதூரி மற்றும் வெங்கி புஷதபு ஆகியோருடன் இணைந்து இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். கமனம் படத்தின் முழு படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் இறுதிக்கட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நடித்துள்ள மற்ற நடிகர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும்.

தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்குழு:
கதை-திரைக்கதை-இயக்கம்: சுஜனா ராவ்
தயாரிப்பாளர்கள்: ரமேஷ் கருதூரி, வெங்கி புஷதபு, ஞான சேகர் V.S
இசை: இசைஞானி இளையராஜா
DOP: ஞான சேகர் V.S
வசனம்: சாய் மாதவ் புர்ரா
படத்தொகுப்பு: ராமகிருஷ்ணா அராம்

Most Popular

Recent Comments