சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க போவதில்லை என்று கூறியிருப்பதை தொடர்ந்து சினிமா பிரபலங்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த் டிசம்பர் இறுதியில் அரசியல் கட்சி தொடங்குவது குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றும் ஜனவரி மாதத்தில் அரசியல் கட்சியை தொடங்குவார் என்றும் கடந்த சில மாதங்களாக பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.இந்நிலையில் அண்ணாத்த படத்தின் ஷுட்டிங்கிற்காக ஹைதராபாத் சென்ற அவருக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று முன்தினம் சென்னை திரும்பினார்.
மருத்துவர்கள் ஓய்வு எடுக்கும் படியும் கொரோனா தொற்று பரவும் சூழலை தடுத்துக்கொள்ளும்படியும் கூறியிருந்தனர். இந்நிலையில் உடல் நலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக தான் அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.என்னை நம்பி என்னுடன் வருபவர்களை தான் பலிகடா ஆக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். தேர்தல் அரசியலுக்கு வராமல் மக்களுக்கு என்ன சேவை செய்ய முடியுமோ அதை செய்ய விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.
ரஜினிக்காந்தின் இந்த அறிவிப்பை தொடர்ந்து திரைத்துறை பிரபலங்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக நடிகை கஸ்தூரி பதிவிட்டுள்ள டிவிட்டில்,
நடிகரும் இயக்குநருமான ஆர்கே சுரேஷ், ரஜினியின் அறிக்கையை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். மேலும் நல்லவர்களுக்கு ஆண்டவன் துணை என்றும் உண்டு என்றும் பதிவிட்டுள்ளார்.
நடிகையும் பிக்பாஸ் பிரபலமுமான சாக்ஷி அகர்வால், டேக் கேர் தலைவா.. மற்ற அனைத்தையும் விட உடல் நலம்தான் முக்கியம் என தனது டிவிட்டர் பக்கத்தில் ரஜினியின் அறிக்கையை பகிர்ந்து பதிவிட்டுள்ளார்.
இயக்குநர் ரத்னகுமார் பதிவிட்டுள்ள டிவிட்டில், உங்கள் உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள் சார். அரசியலை விட அமைதி பெரியது.. மதிக்கிறோம் என தெரிவித்துள்ளார்.
நடிகை குஷ்பூ ட்விட்டர் பதிவில்
இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் ட்விட்டர் பதிவில்
இயக்குனர் ,நடிகர் லாரன்ஸ் ட்விட்டர் பதிவில்
நடிகர் கலையரசன் ட்விட்டர் பதிவில்
நடிகை நக்மா ட்விட்டர் பதிவில்
சீமான் ட்விட்டர் பதிவில்
இயக்குனர் லிங்குசாமி ட்விட்டர் பதிவில்