2018ம் ஆண்டு ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மன் குரானா, ராதிகா ஆப்தே மற்றும் தபு நடிப்பில் பாலிவுட்டில் மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘அந்தாதுன்’ .
இதனையடுத்து இப்படத்தின் ரீமேக் உரிமையை பல மொழிகளில் வாங்க கடும் போட்டியே நடை பெற்றது. அந்த வகையில், தமிழ் ரீமேக் உரிமையை மிக பெரிய தொகைக்கு நடிகர் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் வாங்கியிருந்தார். அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக்கில் பிரசாந்த் நடிக்க இருப்பதாகத் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதற்காக பியானோ வசிக்க கற்று கொண்டார் மற்றும் 20கிலோ எடை குறைத்தார் பிரஷாந்த்.
தலில் தமிழ் ரீமேக்கை இயக்குனர் மோகன் ராஜா இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் மோகன்ராஜா மற்றும் தயாரிப்பாளர் தியாகராஜனுக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளது.மேலும் தனி ஒருவன் 2 படத்திற்கு முன்னர் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகும் ‘ஆர்ஆர்ஆர்’ படத்திலும் மோகன்ராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். எனவே மோகன் ராஜா இப்படத்தில் இருந்து விலக முடிவெடுத்து விட்டார். வாங்கிய அட்வான்ஸ் தொகையை கூட திருப்பி கொடுத்து விட்டார்.
ஜோதிகா நடிப்பில் வெளியான ‘பொன்மகள் வந்தாள்’ படத்தில் தியாகராஜன் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அப்போது படத்தின் இயக்குனர் ஜேஜே பிரெட்ரிக் உடன் அவருக்கு நல்ல பழக்கம் ஏற்பட்டுள்ளது மற்றும் அவரது தொழில் நேர்த்தி தியாகராஜன் அவர்களுக்கு மிகவும் பிடித்து போனது. அதனால் தற்போது ‘அந்தாதுன்’ படத்தின் ரிமேக்கை பிரெடிரிக் இயக்குமாறு தியாகராஜன் கேட்டு கொண்டுள்ளார். தற்போது ‘அந்தாதுன்’ தமிழ் ரீமேக்கை ஜேஜே பிரெட்ரிக் இயக்கவுள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர் படக்குழுவினர்.