பிக் பாஸ் சீசன் 4 தமிழில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் கடந்த 1 வாரமாக ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பத்தில் இருந்தே அனிதா சம்பத் மற்றும் சுரேஷ் ஆகிய இருவரும் பிக் பாஸ் வீட்டில் தேவை இல்லாத சின்ன விஷயங்களுக்கு கூட சண்டை போட்டு வருகிறார்கள். அந்த சண்டை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் வருகிறது, கடந்த சனி மற்றும் ஞாயிறு கமல்ஹாசன் முன்னிலையில் இருவரும் மோதிக் கொண்டனர் என்பதை அனைவரும் பாத்திருப்போம்.
இந்த நிலையில் திடீரென யாரும் எதிர்பாராத வகையில், இன்று (அக்டோபர் 14) சுரேஷ் மற்றும் அனிதா ஆகிய இருவரும் “சின்ன மச்சான்” பாடலுக்கு டூயட் பாடி ஆட்டம் போடுவது அனைவருக்கும் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
இது டாஸ்க் ஆக இருந்தாலும் இந்த பாட்டில் கூட அனிதா, சுரேஷ் காலை வாரும் வகையில், ‘ஊருக்குள்ள உங்களை ஏசுராங்க’ என்று அந்த பாட்டின் வரிகளை சுரேஷுக்கு குத்திக் காட்டியது சக போட்டியாளர்கள் மதியுள் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
உடனே அவர்கள் எழுந்து கைதட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
#Day10 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/QiB8MJwVQf— Vijay Television (@vijaytelevision) October 14, 2020