சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் படம் ‘சூரரை போற்று’ . நெடுமாறன் ராஜாங்கம் என்ற கதாபாத்திரத்தில் சூர்யா பைலட் ஆபீஸராக நடித்துள்ளார். சூர்யாவிற்கு ஜோடியாக முதன்முறையாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் என பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கொரோனா ஊரடங்கினால் திரையரங்கில் ரிலீஸ் செய்யாமல் ஓடிடி ல் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளார் சூர்யா. உலகம் முழுவதும் அக்டோபர் 30ம் தேதி அமேசான் ப்ரைம் இல் வெளியாகவுள்ளது.
சூரரைப் போற்று படத்திலிருந்து ஏற்கனவே 3 பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த நிலையில் “மேக்கிங் ஆஃப் மாறா” காணொளியின் இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது. ஸ்க்ரிப்ட் டூ ஸ்கிரீன் இந்த கதை எப்படி சாத்தியமானது என்றும், இதற்காக சூர்யா உட்பட படக்குழுவினர் அனைவரும் மேற்கண்ட முயற்சிகளைப் பற்றியும் இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது. சூரரைப் போற்று ரிலீஸிற்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில் “மேக்கிங் ஆஃப் மாறா” இரண்டாம் பாகம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.