2004ம் ஆண்டு உலகநாயகன் கமல் அவர்கள் நடித்து, தயாரித்து, இயக்கிய “விருமாண்டி” திரைப்படத்தில் ஜெயில் வார்டனாக ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் கால் பதித்தார் நடிகர் தீனா.
அதன்பின் பல திரைப்படங்களில் வில்லனாகவும், ஸ்டண்ட் மேனகாவும் பல கதா பாத்திரங்களில் நடித்து தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.புதுப்பேட்டை, எந்திரன், மெர்சல், மாஸ்டர், பிகில்,தெறி, திமிரு பிடிச்சவன் போன்ற பல திரைப்படங்களில் சூப்பர்ஸ்டார் ரஜினி, தளபதி விஜய், தனுஷ் மற்றும் விஜய் ஆண்டனி போன்ற பல முன்னணி நட்சத்திரங்களோடு இணைந்து நடித்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன் கொரோனோ ஊரடங்கு காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்ட சூழ்நிலையில் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டது. அப்போது பல நட்சத்திரங்களும் முன் வந்து தங்களால் இயன்ற உதவியை மக்களுக்கு செய்து வந்தனர். நடிகர் தீனா தன்னால் இயன்ற உதவியாக மளிகை சாமான்களை வாங்கி ஏழை, எளிய மக்களுக்கு கொடுத்து உதவினார். இந்த சம்பவத்தின் மூலம் பல தரப்பு மக்களிடமிருந்து பாராட்டுகள் குவிந்தது.
எனக்கு முதலாவது முனைவர்(doctorate)பட்டம் வழங்கிய global peace பல்கலைக்கழகத்திற்க்கு எனது மனமார்ந்த நன்றிகள்.இந்த பட்டம் இன்னும் மேலும் மேலும் என் பணிகளை திறம்படசெய்ய ஒரு ஊக்கத்தைத்தருகிறது🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 pic.twitter.com/URPyckTtq4— SAI DEENA (@actor_saideena) September 28, 2020
தற்போது இவருக்கு குளோபல் பீஸ் பல்கலைகழகம் டாக்டரேட் பட்டம் வாங்கி சிறப்பித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “எனக்கு முதலாவது முனைவர் பட்டம் வழங்கிய குளோபல் பீஸ் பல்கலைக்கழகத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள். இந்தப் பட்டம் இன்னும் மேலும் மேலும் என் பணிகளை திறம்பட செய்ய ஒரு ஊக்கத்தை தருகிறது” என தெரிவித்துள்ளார்.