மயங்க் சர்மா இயக்கி அபுந்தன்டியா என்டர்டெயின்மென்ட்டால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த 12 பாகங்கள் கொண்ட உளவியல்சார் த்ரில்லரில் அபிஷேக் பச்சன், நித்யா மேனன் ஆகியோர் டிஜிட்டல் அறிமுகத்தை மேற்கொண்டுள்ளதுடன் அமித் சாத் மற்றும் சயாமி கெர் ஆகியோரும் நடித்துள்ளனர்
இந்தியாவிலும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் பிராந்தியங்களிலும் உள்ள பிரைம் உறுப்பினர்கள் தற்போது Breathe: Into The Shadows அசல் தொடரை, மொழி விருப்பத்தின் அமைப்புகளை மாற்றுவதன் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் கண்டு மகிழலாம்.
மும்பை, இந்தியா, 25 செப்டம்பர், 2020: சமீபத்தில் வெளியிடப்பட்ட அமேசான் ஒரிஜினல் சீரிஸ் Breathe: Into the Shadowsன் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிமாற்றங்களை அறிமுகம் செய்வதாக அமேசான் பிரைம் வீடியோ இன்று அறிவித்துள்ளது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் அபிஷேக் பச்சன் மற்றும் புகழ்பெற்ற தென்னிந்திய நடிகை நித்யா மேனன் ஆகியோரின் டிஜிட்டல் அறிமுகத்துடன், அபுன்தன்ட்டியா என்டர்டெயின்மென்ட் உருவாக்கி தயாரித்துள்ள இந்த உளவியல்சார் கிரைம் திரில்லரில், அதன் அற்புதமான திரைக்கதைக்காக பார்வையாளர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுளள்து. இந்தியாவிலும் 200க்கும் மேற்பட்ட நாடுகளிலும் மற்றும் பிராந்தியங்களிலும் உள்ள பிரைம் உறுப்பினர்கள் இப்போது இந்த மிகவும் விரும்பப்படும் அமேசான் அசல் தொடர் Breathe: Into the Shadowsஐ, ஆடியோ அமைப்புகளில் தங்கள் மொழி விருப்பத்தேர்வைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் தெலுங்கு மற்றும் தமிழிலும் பார்த்து மகிழலாம்.
கதைச்சுருக்கம்:
கபீர் சாவந்த் மீண்டும் வந்துள்ளார்! டெல்லி குற்றப்பிரிவின் முரண்பாடான சூழலில் நீதிக்கான அவரது முயற்சி தொடர்கிறது. அவினாஷ் சபர்வாலின் 6 வயது மகள் கடத்தப்படுகிறாள், கடத்தல்காரன் ஒரு அசாதாரண மீட்கும் கோரிக்கையுடன் அவர்களைத் தொடர்பு கொள்கிறான். குழந்தையை மீட்க ஒருவரைக் கொல்ல அறிவுறத்துகிறான்! இதற்கிடையில், அவினாஷ் செய்த கொலை தொடர்பான விசாரணையை கபீர் விசாரிக்கத் துவங்குகிறார். அவினாஷ் தனது மகளை காப்பாற்றுவாரா?