V4UMEDIA
HomeNewsKollywoodதமிழில் ரீமேகாகும் "வின்சி டா" திரைப்படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதும் இயக்குனர் ராம் !

தமிழில் ரீமேகாகும் “வின்சி டா” திரைப்படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதும் இயக்குனர் ராம் !

பெங்காலி இயக்குனர் ஸ்ரீஜித் முகர்ஜி இயக்கத்தில் 2019ம் ஆண்டு வெளியான “வின்சி டா” திரைப்படம் தமிழில் ரீமேக் ஆக உள்ளது.

‘வின்சி டா’ படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பிரபல தயாரிப்பாளர் தனஞ்சயன் வாங்கியுள்ளார். “இயக்குனர் ராமுடன் இணைந்து திரைக்கதை மற்றும் வசனம் எழுதியுள்ளோம். போன் கால் மற்றும் வீடியோ கால் மூலம் நாங்கள் இருவரும் இணைந்து வேலை செய்தோம். அது மிகவும் சுவாரசியமாக மற்றும் மிக புதுமையாகவும் இருந்தது. படத்திற்கான முழு ஸ்கிரிப்ட் தயாரித்து விட்டோம். நடிகர்கள் மற்றும் டெக்னீசியன்களை இறுதி செய்யும் பணியில் நாங்கள் இருக்கிறோம்” என தனஞ்செயன் தெரிவித்துள்ளார்.

Image

“வின்சி டா” பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல விருதுகளை வாங்கி குவித்துள்ளது நாம் அனைவரும் அறிந்ததே.

இப்படத்தில் வரும் இரண்டு கதாபாத்திரங்களும் மிக முக்கியமானவை. ஹீரோ-வில்லன் வேறுபாடு இல்லை, இறுதியில், ஹீரோ வில்லனாக மாறுகிறார், வில்லன் ஹீரோவாக மாறுகிறார். யதார்த்தமான இந்தப் படம் இறுதியில் ரசிகர்கள் அனைவரையும் புல்லரிக்க வைத்துவிடும்” என தயாரிப்பாளர் தனஞ்செயன் தெரிவித்துள்ளார்.

Image
We will be remaking #VinciDa , a super hit Bengali film in Tamil. Our next venture after #Kabadadaari #Kapatadhaari …happy to work with Director #Ram sir in the project 👍👍👍 @Dhananjayang @lalithagd pic.twitter.com/wL2hfP3Kgf

— Creative Entertainers (@CreativeEnt4) October 28, 2020

Most Popular

Recent Comments