‘பாணா காத்தாடி’ மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சமந்தா. பின்னர் இவர் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் நிறைய வெற்றி படங்களை கொடுத்து வந்தார். நிறைய முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் இவர். இவர் நாக அர்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்கு பிறகு இவர் நடிப்பில் நிறைய படங்கள் வெளிவந்துள்ளது. திருமணத்திற்கு பிறகும் தனது ரசிகர்களையும் மார்க்கெட்டையும் குறையாமல் வைத்து கொலைபவர் சமந்தா.
இவர் அண்மையில் இவரது கணவர் நாக சைதன்யாவுடன் இணைந்து தெலுங்கில் ‘மஜ்லி’ என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் நிறைய வரவேற்பை பெற்றுள்ளது.
சமந்தா இந்த படத்தை தொடர்ந்து தற்போது ‘ஓ பேபி’ என்ற படத்தில் நடித்திருந்தார். இவர் இந்த படத்தில் முன்னணி நடிகை லட்சுமியுடன் இணைத்து நடித்துள்ளார். இந்த படம்
இந்த வார இறுதியில் ஜூலை 5-ம் தேதி திரைக்கு வருகிறது பி .வி .நந்தினி ரெட்டி இந்த படத்தை இயக்குகிறார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதை தொடர்ந்து இந்த படம் வெற்றி பெற வேண்டும் என்று சமந்தா தனது தோழியான ரம்யா விஜே உடன் இணைந்து திருப்பதி கோவிலுக்கு நடந்து மலையேறி உள்ளார், மேலும் இந்த படம் வெற்றியடைய வேண்டும் என பிரார்த்தனை செய்கிறார்.