பாண்டிச்சேரி சண்முக தியேட்டரில் ரசிகர்கள் பிகில் ரீ ரிலீஸ்!
அட்லீ இயக்கத்தில், ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தளபதி விஜய்யின் ‘பிகில்’ திரைப்படம், அக்டோபர் 25 தேதி அன்று வெளியானது. உலகளவில் தமிழ் திரைப்பட வரிசையில் ஒரு புதிய சாதனையை உருவாக்கியது இப்படம்
‘பிகில்’ பெண்களின் முன்னேற்றம் மற்றும் பெண் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து வெளியான திரைப்படம் மற்றும் நயன்தாரா, கதிர், விவேக், யோகி பாபு, ரெபா மோனிகா ஜான், இந்தூஜா, வர்ஷா பொல்லம்மா, அமிர்தா அய்யர் மற்றும் ஜாக்கி ஷிராஃப் ஆகியோர் இப்படத்தில் நடித்தனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்தார்.கொரோன தாக்கத்தால் திரையரங்குகள் மூடப்பட்டு இருந்தது . பாண்டிச்சேரியில் தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டு உள்ளது .இந்நிலையில் தளபதி விஜயின் பிகில் படம் பாண்டிசேரி சண்முகா தியேட்டரில் 23 .10 .2020 இன்று திரையிடப்பட்டது .ரசிகர்கள் கொண்டாட்டத்துடன் திரைப்படம் ரீ ரிலீஸ் ஆகியது .