V4UMEDIA
HomeNewsKollywoodநடிகர் சூர்யாவின் “சூரரை போற்று” பட வெளியிட்டில் உள்ள சிக்கல் தீர்ந்தது !

நடிகர் சூர்யாவின் “சூரரை போற்று” பட வெளியிட்டில் உள்ள சிக்கல் தீர்ந்தது !

சூர்யா நடித்துள்ள ‘சூரரைப் போற்று’ திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி (OTT) தளத்தில் அக்டோபர் 30-ம் தேதி வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது. இந்த திரைப்படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

அக்டோபர் 30 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியிடப்படவிருந்த நிலையில், படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது .
 


இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கியவர் ஜி.ஆர்.கோபிநாத், வாழ்க்கையை மையப்படுத்தியே இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளதால், இந்திய விமானப் படை தரப்பிலிருந்து ஒப்புதல் கிடைப்பதற்காக படக்குழு காத்திருந்தது . தற்போது அதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது . விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது .

Most Popular

Recent Comments