V4UMEDIA
HomeNewsKollywood'மன்மதன்' பிஜிஎமில் வெளிவந்த சிம்புவின் வீடியோ!!

‘மன்மதன்’ பிஜிஎமில் வெளிவந்த சிம்புவின் வீடியோ!!



குழந்தை நட்சத்திரமாக இருந்து ‘காதல் அழிவதில்லை’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் சிலம்பரசன். இவர் நடிப்பில் வெளிவந்த ‘கோவில், குத்து, மன்மதன்’ என பல படங்கள் மூலம் ரசிகர்கள் மனதில் எஸ்டிஆர் ஆக வலம் வருபவர். இவர் கடைசியாக நடித்த படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’, இந்த படத்துக்கு பிறகு சிம்பு நடிக்கும் படம் ‘மாநாடு’. இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார். இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தில் இவருடன் கெளதம் கார்த்திக்கும் சேர்ந்து நடிக்கிறார். கெளதம் கார்த்திக் ‘மாநாடு’ படத்தின் ஷூட்டிங்கில் இருந்து நிறைய படங்களை டுவிட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளார். வி ஹவுஸ் புரொடக்ஷன் சுரேஷ் காமாட்சி இந்த படத்தை தயாரிக்கிறார்.


பிரபல இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன் இந்த படத்தில் சிம்புக்கு ஜோடியாக நடிக்கிறார். தற்போதுஇந்த படம் குறித்து சிம்புவின் ஒரு புதிய வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் சிம்பு மாநாடு படத்தின் ஸ்கிரிப்ட் வைத்து படித்துக் கொண்டிருப்பது போலவும். கேமரா மெல்ல மேலே அவர் முகத்தை நோக்கி நகர்கிறது. பின்னணியில் மன்மதன் பிஜிஎம் ஒலிக்க மாஸ்ஸாக காட்சியளிக்கிறார் சிலம்பரசன். இவரது இந்த வீடியோ அவரது ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியளித்துள்ளது. மேலும் இந்த வீடியோ இணையதளத்தில் மிகவும் டிரெண்டாகி வருகிறது.

Most Popular

Recent Comments