தமிழ் சினிமாவில் நல்ல கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடிப்பவர்கள் வெகு சிலர் தான். அதில் பாபி சிம்ஹாவும் ஒருவர். தன் நடிப்புத்திறமையால் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு என பிஸியாக நடித்து வரும் பாபி சிம்ஹா தற்போது புதிய படமொன்றில் கேங்ஸ்டராக நடிக்கவுள்ளார்.
.
பல ஆண்டுகளாக விளம்பரப்பட உலகில் பிரபலமான விக்ரம் ராஜேஷ்வர் இப்படத்தை இயக்கவுள்ளார். கே.ராஜேஷ்வர் கதை, திரைக்கதை, வசனம் எழுதும் புதிய படத்தில் பாபி சிம்ஹா கேங்க்ஸ்டராகநடிக்கவுள்ளார்.
இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. 2021ம் ஆண்டு தொடக்கத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்