தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் செல்வராகவன். இவரது படைப்புகளுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இவரது இயக்கத்தில் வெளிவந்த துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, 7G ரெயின்போ காலனி , யாரடி நீ மோகினி , மயக்கம் என்ன, ஆயரத்தில் ஒருவன் என அனைத்தும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இயக்குனர் செல்வராகவன் தற்போது ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார். அறிமுக இயக்குனர் அருண் மாத்தேஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவன் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் முதன்முறையாக இணைந்து நடிக்கவுள்ள புதிய படத்திற்கு ‘சாணிக் காயிதம்’ என பெயரிட்டுள்ளனர்.
ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு யாமினி யாகன மூர்த்தி ஒளிப்பதிவு செய்யவுள்ளார். மேலும், இப்படத்தின் மிரட்டலான ப்ரஸ்ட் லுக் ஆகஸ்ட் மாதம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் இப்படம் தற்போதே மிக பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது இந்தப் படத்தின் போஸ்டரை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார். போஸ்டரில் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் ரத்தக்கறையுடன் விரித்து வைக்கப்பட்ட கத்திகளுடன் முன் குத்த வைத்து உட்கற்ந்துள்ளனர். செல்வராகவன் தாடியுடன் மிரட்டல் லுக்கில் காணப்படுகிறார்.