லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். இப்படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி வில்லனாகவும், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன், ஆண்ட்ரியா, கௌரி கிஷன் என பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார். சேவியர் பிரிட்டோ மற்றும் லலித் குமார் இணைந்து பெரும் பொருட்செலவில் இப்படத்தை தயாரித்துள்ளனர். கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்கு வந்த பிறகு இப்படத்தின் ரிலீஸ் திரையரங்கில் மிக பிரமாண்டமான முறையில் இருக்கும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
மாஸ்டர் திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் பெரிய ஹிட். குறிப்பாக தளபதி விஜய் அவர்கள் பாடிய “குட்டி ஸ்டோரி” பட்டி தொட்டி வரை பெரிய ரீச்.
பல மாதங்களாக படத்தை பற்றி அப்-டேட் ஏதும் இல்லாமல் இருந்த ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது மாஸ்டர் படக்குழுவினர். தளபதி விஜய் படம் இல்லாத தீபாவளியா ?? ஆம் தளபதி விஜய் யின் மாஸ்டர் டீஸர் தீபாவளி அன்று மாலை 6 மணிக்கு வெளிவரவுள்ளது. ரசிகர்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கின்றனர். தீபாவளி மாலை சன் டிவியில் மாபெரும் வெற்றி பெற்ற பிகில் திரைப்படம் ஒளிபரப்பாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.