சமீபத்தில் நடிகர் விஜய்க்கும் அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகருகும் இடையே அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பாக கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இதை நாம் அனைவரும் அறிந்ததே. எனவே இது பொதுவெளிக்கு வந்ததால் அனைத்து மீடியாக்களின் கவனம் பெற்றது.
தளபதிவிஜய் அவர்களுக்கு அரசியலில் ஈடுபாடில்லை என்றாலும் எஸ்.ஏ.சி அதிக ஈடுபாட்டுடன் உள்ளதாகவும் தன்னைக் கேட்காமலே அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்திற்கு கையெழுத்து வாங்கி அதில் தன்னைப் பொறுப்பாளராக நியமித்துள்ளதாகவும் அதில் தனக்கு விருப்பமில்லாமல் விலகியுள்ளதாகவும் விஜய்யின் அம்மா ஷோபா சமீபத்தில் தெரிவித்தார்.
இந்நிலையில் தளபதி விஜய் தற்போது தனது விஜய் மக்கள் இயக்கத்திற்கு புதிய நிர்வாகிகளாக மாவட்ட தலைவர்கள், இளைஞரணி தலைவர்களை நியமித்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது. இரண்டு தினங்களுக்கு முன்பு பனையூரில் உள்ள தனது மன்ற நிர்வாகிகளை சந்தித்த நிலையில் தற்போது மாவட்ட வாரியாக புதிய லிஸ்ட் வெளியாகியுள்ளது.