V4UMEDIA
HomeNewsKollywoodஅசுர வேகத்தில் டப்பிங் பணிகளை முடித்த நடிகர் சிம்பு !

அசுர வேகத்தில் டப்பிங் பணிகளை முடித்த நடிகர் சிம்பு !

‘ஜீரோ’ மற்றும் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ என இரண்டு படங்களைத் தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஓ மணப்பெண்ணே’ மற்றும் சசி – ஹரிஷ் கல்யாண் இணையும் படம் என நான்கு படங்களை தயாரித்துள்ளது மாதவ் மீடியா.

தற்போது தங்களுடைய தயாரிப்பில் ஐந்தாவதாக உருவாகும் பிரம்மாண்ட படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு நாயகனாக நடித்து வரும் இந்தப் படத்தை சுசீந்திரன் இயக்கி வருகிறார். சென்டிமெண்ட், எமோஷன், காதல், ஆக்‌ஷன், காமெடி என அனைத்தும் கலந்த ஜனரஞ்சகமான படமாக இது உருவாகிறது.

உடல் மெலிந்து புதிய பரிமாணத்துடன் வெளியான அவரது படங்கள் பட்டி தொட்டி எங்கும் பலரையும் ஈர்த்தது. சென்ற மாதம் துவங்கிய ‘ஈஸ்வரன்’ படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து 40 நாட்கள் நடைபெற்றன.

கடந்த வாரம் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து நடிகர் சிலம்பரசன் ‘ஈஸ்வரன்’ படத்தில் பணியாற்றிய 400 பேருக்கும் ஒரு கிராம் தங்கம், வேட்டி சேலை, இனிப்புகள் என தீபாவளி பரிசு வழங்கினார். மேலும் படத்தில் நடித்த துணை நடிகர்கள் 200 பேருக்கு வேட்டி சேலை, இனிப்புகள் வழங்கினார்.

இந்நிலையில் இப்படத்தின் டப்பிங் பணியை இரண்டு நாட்களில் முடித்துள்ளார் சிம்பு. இது தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அவர். அவரது ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் சிம்புவை வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

ஒஸ்தி படத்துகு இசையமைத்த தமன் இசையில், திரு -ஒளிப்பதிவில் உருவாகிவரும் இப்படத்திற்கு ஆண்டனி எடிட்டிங் செய்கிறார்

Most Popular

Recent Comments