V4UMEDIA
HomeNewsKollywoodலைக்கா தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்த சிவகார்த்திகேயன் !!

லைக்கா தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்த சிவகார்த்திகேயன் !!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன். நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் வெற்றி வாகை சூடி வலம் வருகிறார். சிவகார்த்திகேயன் பட நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து ஒரு படத்தை உருவாக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு இன்று காலை வெளியாகும் என்றும் நேற்று செய்தி வெளியானது.

இந்த நிலையில் சற்று முன் லைக்கா நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள வீடியோ ஒன்றில் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் டைட்டில் ’டான்’ என்றும் இந்த படத்தை சிபி சக்கரவர்த்தி என்பவர் இயக்க இருக்கிறார். இவர் இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இதனை அடுத்து சிவகார்த்திகேயன் 19வது படத்தின் டைட்டில் ’டான்’ என்பது உறுதியாகி உள்ளது இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது.

கே.ஜெ.ஆர் நிறுவனத்தின் டாக்டர் மற்றும் அயலான் படங்களில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ளார் என்பதும் அந்த படங்கள் அடுத்தடுத்து விரைவில் வெளியாக உள்ளது.

Most Popular

Recent Comments