V4UMEDIA
HomeNewsKollywoodதளபதி விஜய்யின் "வாத்தி கம்மிங்" பாடலுக்கு நடனம் ஆடிய ஜப்பான் பெண் ! வைரலாகும் வீடியோ...

தளபதி விஜய்யின் “வாத்தி கம்மிங்” பாடலுக்கு நடனம் ஆடிய ஜப்பான் பெண் ! வைரலாகும் வீடியோ !!

தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னன் தளபதி விஜய். இவர் தமிழ் சினிமாவில் கால் பதித்து இன்றுடன் 28 ஆண்டுகள் ஆகின்றன. உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். இப்படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி வில்லனாகவும், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன், ஆண்ட்ரியா, கௌரி கிஷன் என பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார். சேவியர் பிரிட்டோ மற்றும் லலித் குமார் இணைந்து பெரும் பொருட்செலவில் இப்படத்தை தயாரித்துள்ளனர். கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்கு வந்த பிறகு இப்படத்தின் ரிலீஸ் திரையரங்கில் மிக பிரமாண்டமான முறையில் இருக்கும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

சமீபத்தில் வெளியான தளபதி விஜய் யின் மாஸ்டர் டீஸர் தீபாவளி அன்று மாலை 6 மணிக்கு வெளியானது. ரசிகர்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கின்றனர். தளபதியை மிக அழகாக காட்டியுள்ளார் லோகேஷ். சண்டை காட்சிகளில் வழக்கம் போல பட்டைய கிளப்பியுள்ளார் தளபதி விஜய்.

இந்நிலையில் தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படமும், ஓ.டி.டி.யில் வெளியாகலாம் என்ற செய்தி பரவியது. #MasterOnlyOnTheatres என்ற ஹேஷ்டேக்கை தளபதி விஜய் ரசிகர்கள் உலகம் முழுவதும் டிரெண்டாக்கி வருகின்றனர்.

மாஸ்டர் திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் பெரிய ஹிட். குறிப்பாக தளபதி விஜய் அவர்கள் பாடிய “குட்டி ஸ்டோரி” பட்டி தொட்டி வரை பெரிய ரீச்.இந்நிலையில் ஜப்பான் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் #28YearsOfBelovedVIJAY ஐ முன்னிட்டு “வாத்தி கம்மிங்” பாடலுக்கு நடனம் ஆடி விடியோவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிக வைரலாகி வருகிறது

Most Popular

Recent Comments