நடிகை தமன்னா பாலிவுட் படத்தில் அண்மையில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இவர் தமிழில் ‘கண்ணே கலைமானே & தேவி 2’ படத்தில் நடித்திருந்தார். தற்போது தமன்னா ஹிந்தி படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் தமன்னாவிற்கு ஜோடியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் வெளிவந்த ‘பேட்ட’ படத்தின் வில்லனான நவாசுதீன் சித்திக் நடிக்கிறார்.
தமன்னா பாலிவுட்டில் கடைசியாக நடித்த படம் ‘காமோஷி’ இந்த படத்தின் தமிழ் ரீமேக் தான் ‘கொலையுதிர் காலம்’. இதை தொடர்ந்து இவர் நடிக்கவிருக்கும் இந்த படத்தை நவாசுதீன் சித்திக்கின் தம்பி ஷமாஸ் நவாப் சித்திக். இவர்கள் கூட்டணியில் தயாராகும் இந்த படத்திற்கு ‘போலோ சுடியான்’ என பெயரிட்டுள்ளனர்.
இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில், ‘இமைக்கா நொடிகள்;’ படத்தின் வில்லனும் பிரபல பாலிவுட் பட இயக்குனருமான அனுராக் கஷ்யப் நடிக்கிறார்.
இது குறித்து தமன்னா தனது டுவிட்டர் பக்கத்தில் ஷமாஸ் நவாப் சித்திக் பதிவை ரீ-டுவிட் செய்து, இந்த படத்தில் நடிப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் வரை காத்திருக்க முடியவில்லை’ என ஆங்கிலத்தில் பகிர்ந்துள்ளார்.
https://twitter.com/tamannaahspeaks/status/1144489667309400065




















