இந்தப்படத்தில் அர்ஜுன் மற்றும்ஷாம் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநாயகியாக அக்ஷாபட் நடிக்கிறார். மற்றும் மனிஷாகொய்ராலா ரவிகாளே, ஜீன், அருள்மணி ஆகியோர் நடிக்கிறார்கள்.
இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.
எடிட்டிங் – K.V.கிருஷ்ணாரெட்டி / ஒளிப்பதிவு – சேதுஸ்ரீராம்
நடனம் – விட்டல் / கலை – ஆனந்தன்
நிர்வாக தயாரிப்பு – இந்துமதி, தனஜெய் குன்டப்பூர்
எழுதி இயக்குபவர் – A.M.R. ரமேஷ்
தயாரிப்பு மேற்பார்வை – அண்ணாமலை
அக்ஷயா கிரியேசன்ஸ் சார்பில் பிரமாண்டமாக இப்படம் தயாராகிறது. படம் பற்றி இயக்குனர் A.M.R.ரமேஷிடம் கேட்டோம்…
வழக்கமாக நடந்த உண்மை சம்பவங்களை வைத்து தான் படம் எடுப்பீர்கள். ராஜீவ்காந்தி கொலை, வீரப்பன் என்கவுண்டர் அது போல் இந்த படமும் உண்மை சம்பவமா?
சுனந்தா புஷ்கர் கொலை வழக்கின் உண்மை சம்பவமா ?
இது எந்த தனிப்பட்ட விஷயமும் அல்ல. அது மாதிரி நிறைய கொலைகள் நடந்திருக்கிறது எந்த கொலை சம்மந்தப் பட்டது என்பதை திரையில் பார்ப்பீர்கள் என்று கூறினார்.
படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து விட்டது..டப்பிங் மற்றும் இதர வேலைகள் நடைபெறுகிறது. படம் செப்டம்பரில் வெளியாக உள்ளது.