G.M.Film Corporation பட நிறுவனம் சார்பில் சிறு முதலீட்டில் தயாரிக்கப்பட்டு மாபெரும் வசூலை அள்ளிகுவித்த திரௌபதி படத்தை தொடர்ந்து தற்போது அதே நிறுவனம் தயாரிக்கும்இரண்டாவது படம் ” ருத்ர தாண்டவம்” மோகன் G இயக்கி தயாரிக்கும் இந்த படத்தில் நாயகனாக ரிஷி ரிச்சர்டு நடிக்கிறார்.சின்னத் திரை நிகழ்ச்சிகளில் நடித்து பிரபலமான தர்ஷா குப்தா கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
இதன் படப்பிடிப்பு நேற்று (ஜனவரி 05) துவங்கியுள்ளது.
திரௌபதி படத்தை வெளியிட்ட 7 G ஃபிலிம்ஸ் சிவாஇந்த படத்தையும் உலக முழுவதும் வெளியிடும் உரிமையை பெற்றுள்ளார்.பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் ஒளிப்பதிவாளர் பரூக் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி படத்தின் இசையமப்பாளர் ஜூபின் இசையமைக்கிறார்.படப்பிடிப்பு வட சென்னை பகுதிகளில் தொடர்ந்து நடைபெற உள்ளது.