பிக் பாஸ் தமிழ் சீசன் 3 கிட்டத்தட்ட பாதி போட்டியாளர்களை நீக்கியுள்ளது மற்றும் ஒவ்வொரு போட்டியாளரின் நடத்தை குறித்த பல ஊகங்கள் உள்ளன. பங்கேற்பாளர்கள் வீட்டினுள் பணிகள் மற்றும் டாஸ்குகள் என இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளனர்.
கவினின் நண்பர் கவின் சரியாக விளையாடாத காரணத்தினால் அவரை அறைந்து சென்றது என இந்த வாரம் பிக் பாஸில் நிறைய நடந்தது. மேலும் வார இறுதி என்பதால் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் நாள் இது.
இந்நிலையில் இன்றைய புதிய புரோமோ வெளியாகியுள்ளது. அதில், போட்டியாளர்களிடையே கமல்ஹாசன், இந்த வாரம் சேரனுக்கு ரகசிய அறையும், கவினுக்கு பப்ளிக்கா ஒரு அறையும் கிடச்சது. இரண்டும் இரண்டு விதமான அறைகள் என்று நக்கலாக தெரிவித்தார்.