நடிகர் விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் படம் ‘பிகில்’. அட்லீ இயக்கிய இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ‘பிகில்’ ஐ ஏஜிஎஸ் சினிமாஸ் தயாரிக்கிறது. நடிகர் விஜய், அட்லீ, மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் மூவரின் கூட்டணியில் வெளியான வெற்றி படம் ‘மெர்சல்’. ‘பிகில்’ படம் பெண்கள் கால்பந்தை அடிப்படையாகக் கொண்டது, இதில் நயன்தாரா, யோகி பாபு, டேனியல் பாலாஜி மற்றும் பலர் நடிக்கின்றனர்.
வெளியிடப்பட்ட முதல் பாடல் ‘சிங்கப்பெண்ணே’ பாடல் ஒரு பெண்களுக்கான பாடலாக அமைந்தது. ஒரு பெண் தைரியமாக வகிக்கும் பல்வேறு பாத்திரங்களை வெளிப்படுத்திய இந்தப் பாடல் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இதேபோல், இரண்டாவதாக வெளியான ‘வெறித்தனம்’ பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது. நடிகர் விஜய் அவர்கள் பாடிய இந்த பாடல் புதிய சாதனை படைத்தது.
இப்போது, பிகிலின் கிரியேட்டிவ் தயாரிப்பாளரும், ஏஜிஎஸ் சினிமாஸின் தலைமை நிர்வாக அதிகாரியுமான அர்ச்சனா கல்பாத்தி, பிகிலின் ஆடியோ லான்ச் தேதியை தனது ட்விட்டரில் அறிவித்துள்ளார். விஜய்யின் திரைப்பட ஆடியோ வெளியீட்டுக்கான அழைப்பிற்காகவும், அவரது பேச்சைக் கேட்பதற்காகவும் ஒவ்வொரு முறையும் காத்திருப்பதாகவும், ஆடியோ வெளியீட்டு தேதியை தானே அறிவிப்பதாக இருந்த அவரது கனவு இப்போது நனவாகியுள்ளது என்றும் அவர் தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.
செப்டம்பர் 19 இந்த படத்தின் ஆடியோ லான்ச் சென்னையில் நடைபெறவுள்ளது.