V4UMEDIA
HomeNewsKollywoodவிஜய் ஆண்டனி , விஜய் மில்டன் படத்தில் இணைந்த ஶ்ரீதிவயா !!

விஜய் ஆண்டனி , விஜய் மில்டன் படத்தில் இணைந்த ஶ்ரீதிவயா !!

Infiniti Film Ventures’  தயாரிக்கும் புதிய படத்தை விஜய் மிலடன் இயக்குகிறார்.  விஜய் ஆண்டனி  நாயகனாக நடிக்கும் இப்படத்தில் தெலுங்கு பிரபலம் அல்லு சிரிஷ் முக்கிய பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். தற்போது இப்படத்தில் நாயகியாக ஶ்ரீதிவ்யா இணைந்திருக்கிறார். இப்படத்தின் முக்கிய நடிகர் பட்டாளம் இதன் மூலம்  முழுமைபெற்றதில் படக்குழு மிகுந்த உற்சாகத்தில் உள்ளது.

இப்படத்தினை எழுதி இயக்கி ஒளிப்பதிவு செய்கிறார் விஜய் மில்டன். நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார். கலை இயக்கம் செய்கிறார் கதிர்.

படத்தின் முன் தயாரிப்பு பணிகள் விரைவாக நடைபெற்று வர, வரும் டிசம்பர் மாதத்தில் ஷூட்டிங் தொடங்க உள்ளது. ஆகஸ்ட் 2020  படத்தினை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

Most Popular

Recent Comments