விஜய் டி.வியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல காமெடி நிகழ்ச்சி கலக்க போவது யாரு. பல காமெடி நிகழ்ச்சிகளில் நடித்து அதன் மூலமாக தொலைக்காட்சிக்குள் வந்தார்.
சமீபகாலமாக சினிமாவில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வந்த ராமர், இப்போது ஹீரோவாகவும் ஆகிவிட்டார். அவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி நடிக்கிறார். படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. நேற்று பூஜையுடன் படத்தின் பணிகள் துவங்கியது. சூப்பர் டாக்கீஸ், அவதார் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. குறும்பட இயக்குனர் மணி ராம் இப்படத்தை இயக்குகிறார். ஜபீஸ் கே.கணேஷ் ஒளிப்பதிவு செய்கிறார், விஷ்ணு விஜய் இசை அமைக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் படப்பிடிப்பு துவங்க உள்ளது.
