விமல் நடித்த ‘மாப்ள சிங்கம்’ படத்தை இயக்கிய ராஜசேகர் இயக்கத்தில் ஜீவா மற்றும் அருள்நிதி இணைந்து நடித்துள்ள படம் ‘களத்தில் சந்திப்போம்’. இப்படம் சூப்பர் குட் பிலிம்ஸின் 90-வது படமாகும்.
ஜீவாவிற்கு ஜோடியாக மஞ்சிமா மோகனும், அருள்நிதிக்கு ஜோடியாக பிரியா பாவனி ஷங்கரும் நடித்துள்ளனர். ரோபோ ஷங்கர், பாலா சரவணன், “ஆடுகளம்” நரேன், ரேணுகா என பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பின்னர் கடந்த சில மாதங்களுக்கு முன் திரையரங்குகள் திறந்தாலும், மக்கள் மத்தியில் பயம் மற்றும் சிறிது தயக்கம் இருந்ததால் திரையரங்குகளில் கூட்டம் அதிகம் வரவில்லை என்பதால் ரெலோரிலீஸ் தேதியை தள்ளி வைத்தனர். ஆனால் அதே நேரத்தில் பொங்கல் தினத்தில் தளபதி விஜய்யின் மாஸ்டர் மற்றும் சிம்புவின் ஈஸ்வரன் ஆகிய திரைப்படங்கள் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றன. மாஸ்டர் படம் இன்று வரை டிக்கெட் கிடைக்காமல் மாபெரும் வெற்றி படமாகியுள்ளது தனி கதை.
இதனை அடுத்து தற்போது பல திரைப்படங்கள் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய முன்வந்துள்ளன. அவற்றில் ஒன்று ’களத்தில் சந்திப்போம்’.
ஜீவா மற்றும் அருள்நிதி இணைந்து நடித்த இந்த படம் ஜனவரி 28ஆம் தேதி “தைப்பூச தினத்தில்” வெளியிட உள்ள இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.