அமெரிக்காவின் காட் டேலண்ட் அமெரிக்க திறமை நிகழ்ச்சி போட்டியாகும், இது சைமன் கோவல் உருவாக்கிய உலகளாவிய காட் டேலண்ட் உரிமையின் ஒரு பகுதியாகும். இந்த நிகழ்ச்சி அமெரிக்கா மற்றும் வெளிநாடுகளில் இருந்து பங்கேற்க மற்றும் சில வகையான திறமைகளைக் கொண்ட பல்வேறு வகையான பங்கேற்பாளர்களை வெளி கொண்டுவரும் நிகழ்ச்சி. பாடல், நடனம், நகைச்சுவை, மேஜிக், ஸ்டண்ட், பல்வேறு மற்றும் பிற வகைகளில் இருந்து வருபவர்கள் தங்கள் திறமைகளை காண்பிப்பார்.
இந்த நிகழ்ச்சியில், நடிகர் தனுஷ் அவர்கள் நடித்த ‘மாரி’ படத்தின் ‘தர லோக்கல்’ பாடலிற்கு நடனமாடியுள்ளனர் இளம் நடன கலைஞர்கள். ‘மாரி’ படத்தின் மிகவும் ஹிட் கொடுத்த பாடளுக்கு நடனமாடி உள்ளனர். தனுஷ் அவர்களின் பாடல்கள் அனைத்தும் வைரலாகி, ஹிட் கொடுக்கும் பாடல்கள். இந்த பாடலுக்கு மிகவும் அழகாக நடனமாடி இளம் நடன கலைஞர்கள் நடுவர்களை வியப்பில் ஆழ்த்தினர்.