நடிகர் விஜய் அவர்கலின் மெர்சலான நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் ‘பிகில்’. அட்லீ எழுதி இயக்கியிருக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் நயன்தாரா விஜய்க்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ் சுரேஷ் ஆகியோர் இந்த படத்தை தயாரிக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார்.மேலும் கதிர், ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி, விவேக், இந்துஜா மற்றும் பலர் முக்கிய துணை வேடங்களில் நடித்திருக்கின்றனர்.
பிகிலின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, படத்தின் பிந்தைய தயாரிப்பு செயல்முறை முழு வீச்சில் நடந்து வருவதாகவும், ஒரு சில பகுதிகளைத் தவிர படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவும் ட்வீட் செய்திருந்தார்.