V4UMEDIA
HomeNewsKollywood'ராக்கி' பட டீசர் வெளியீடு !!

‘ராக்கி’ பட டீசர் வெளியீடு !!

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இணைந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவங்கியது நாம் அனைவரும் அறிந்ததே. ரெளடி பிக்சர்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் நயன்தாரா நடிக்கும் “நெற்றிக்கண்” திரைப்படத்தை தயாரித்து வருகின்றனர். மிலிண்ட் ராவ் இப்படத்தை இயக்கியுள்ளார்.

அதே போல “தரமணி” படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற வசந்த் ரவி இயக்குனர் பாரதி ராஜாவுடன் இணைந்து கதாநாயகனாக நடித்துள்ள “ராக்கி” திரைப்படத்தையும் விநியோகம் செய்கின்றனர். அருண் மாத்தேஸ்வரன் எழுதி இயக்கியுள்ளார்.

ராக்கி திரைப்படத்தை சமீபத்தில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இணைந்து வெளியிடுவது நாம் அனைவரும் அறிந்ததே.

இந்த படத்தின் டிரெய்லர் ஏற்கனவே வெளியிடப்பட்டது. இந்த டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தின் “நாட்டுக்கு போகலாம்” பாகம் 3 டீசரை லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா வெளியிட்டுள்ளார். இந்த டீசரும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Image

Most Popular

Recent Comments