V4UMEDIA
HomeReviewNamma Veetu Pillai

Namma Veetu Pillai

Review By :- V4uMedia Team

Release Date :- 27/09/2019

Movie Run Time :- 2.32 Hrs

Censor certificate :- U

Production :- Sun pictures

Director :- Pandiraj

Music Director :- D.Imman

Cast :- Sivakarthikeyan ,Aishwarya Rajesh, Bharathiraja ,Anu Emmanuel, Samuthirakani , Soori Yogi Babu,Aadukalam Naren,Natraj, R. K. Suresh , Subbu Panchu ,Vela Ramamoorthy

‘நம்ம வீட்டுப் பிள்ளை’ விமர்சனம்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்திருக்கும் படம் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’.

சிறுவயதிலேயே தந்தையை இழந்து அம்மா தங்கையுடன் கிராமத்து இளைஞனாக வாழ்ந்துவரும் சிவகார்த்திகேயன், எண்ணெய் வியாபாரம் செய்து வருகிறார் ,அவருக்கு உறுதுணையாக அவரது தங்கை மற்றும் அம்மா உள்ளனர்.நாயகனின் தாத்தாவாக பாரதிராஜா நடிப்பில் அசத்தியுள்ளார் .

இந்தப்படத்தில் அண்ணன் தங்கை பாசத்தை பற்றி சொல்லியிருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ். பெரியப்பா பையனான சூரி எப்போதும் சிவகார்த்திகேயனுடன் வருகிறார்.இவர்கள் இருவரும் சேர்ந்து ஊரில் பொது மக்களுக்கு இடையூறாக இருக்கும் மதுபானக்கடையை சட்டத்தின் மூலமாக அகற்றிவிடுகின்றனர்.

இதனால் மதுபானக்கடை உரிமையாளர் நரேனின் பகைக்கு ஆளாகிறார்.இதனால் வரும் பிரச்சனைகளை சமாளித்து வெளிவருகிறார்.சொந்தங்கள் இருந்தும் சில காரணங்களால் அவர்களின் மூலம் ஒதுக்கப்படுகிறார் கதாநாயகன்

தனது முறைப்பெண்ணை காதலிக்கும் சிவகார்த்திகேயன் தங்கை ஐஸ்வர்யா மூலம் ஹீரோயினுக்கு தெரியப்படுத்துகிறார் .ஹீரோயினாக வரும் அனு இமானுவேலுக்கு கொடுக்கப்பட்ட காட்சிகளை கச்சிதமாக செய்துள்ளார் .ஐஸ்வர்யா யதார்த்தமான கிராமத்து பெண்ணாக நடித்துள்ளார் .அண்ணன் தங்கை செண்டிமெண்ட் காட்சிகள் நெகிழ வைக்கிறது .


ஒரு கட்டத்தில் சிவகார்த்திகேயனை பழி வாங்குவதற்காக அவரது தங்கை ஐஸ்வர்யாவை நடராஜ் திருமணம் செய்கிறார்.நடராஜ் சிவகார்த்திகேயனை பழிவாங்கினாரா,ஹீரோயினுடன் காதலில் வெற்றிபெற்றாரா ,சொந்த பந்தங்களுடன் ஒன்று சேர்ந்தாரா என்பது தான் மீதி கதை.

சிவகார்த்திகேயன் சூரி எப்போதும் போல் காமெடியில் கலக்கியுள்ளார்.சூரியின் மகனாக வரும் பாண்டிராஜ் அவர்களின் மகன் காமெடி காட்சியில் கிளாப்ஸ் வாங்குகிறார் .


நிரவ் ஷா ஒளிப்பதிவு கவர்ந்து இழுக்கிறது .கிராமத்து காட்சிகளை அழகா ஒளிப்பதிவு செய்துள்ளார் .இமான் துள்ளல் இசை படத்திற்கு கூடுதல் பலம் .

மேலும் படத்தில் சமுத்திரக்கனி ,சுரேஷ்,வேலராமமூர்த்தி,சுப்பு பஞ்சு,சண்முகபாண்டியன், அருந்ததி, ரமா, மைனா போன்ற பெரிய நடிகர் நடிகைகள் பட்டாளமே நடித்துள்ளனர்.


கடைக்குட்டி சிங்கம் படத்திற்கு அடுத்து இப்படத்தை இயக்கியுள்ள பாண்டிராஜ் செண்டிமெண்ட் மற்றும் காமெடி கலந்த கமர்ஷியல் படத்தை கொடுத்துள்ளார்.குடும்பத்துடன் பார்க்கக்கூடிய பொழுதுபோக்கு திரைப்படம்.

Most Popular

Recent Comments

Review By :- V4uMedia Team Release Date :- 27/09/2019 Movie Run Time :- 2.32 Hrs Censor certificate :- U Production :- Sun pictures Director :- Pandiraj Music Director :- D.Imman Cast :- Sivakarthikeyan ,Aishwarya Rajesh, Bharathiraja ,Anu Emmanuel, Samuthirakani , Soori Yogi Babu,Aadukalam Naren,Natraj,...Namma Veetu Pillai