Review By :- V4uMedia Team
Release Date :- 25/10/2019
Movie Run Time :- 2.59 Hrs
Censor certificate :- U/A
Production :- AGS Entertainment
Director :- Atlee
Music Director :- Ar Rahman
Cast :- Thalapathy Vijay , Nayanthara, Vivek , Kathir , Jackie Shroff ,Daniel Balaji Anandaraj ,Rajkumar , Devadarshini as Elizabeth ,Yogi Babu, Soundararaja G. Gnanasambandam ,Poovaiyar,I. M. Vijayan, Indhuja,Reba Monica John Varsha Bollamma
பிகில் விமர்சனம்
நடிகர் விஜயுடன் இரண்டு ஹிட் படங்களை கொடுத்த அட்லீ பிகில் மூலம் மூன்றாவது முறையாக கைக்கோர்க்க, இன்று உலகம் முழுவதும் பிகில் சுமார் 4000 திரையரங்குகளுக்கு மேல் ரிலிஸாகியுள்ளது. எங்கு திரும்பினாலும் இன்று ஒரே பிகில் பேச்சு தான், அப்படியான பிகில் சத்தம் ஓங்கி ஒலித்ததா? என்பதை பார்ப்போம்.
மைக்கல் விஜய் தன் ஏரியா பசங்களுக்கு ஒன்று என்றால் முதல் ஆளாக ஓடி வந்து உதவக்கூடியவர். தன்னால் முடிந்த அளவிற்கு தன் ஏரியா புல்லிங்களை பெரியாளாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கின்றார்.
அப்படியிருக்க அவரை ஒரு கும்பல் எப்போதும் கொலை செய்ய துரத்துகிறது. அப்போது எதிர்ப்பாராத விதமாக தமிழ்நாடு பெண்கள் அணி கோச் விஜய்யின் நண்பர் தாக்கப்படுகின்றார்.
அதனால் அந்த புட்பால் டீமிற்கு கோச் செய்ய முடியாமல் போக, அந்த இடத்திற்கு ஒரு டைமில் ஒட்டு மொத்த ஸ்டேட்டையும் கலக்கிய விஜய்யை கோச் ஆக சொல்கிறார்.
ஆனால், அவரை ஏற்க மறுக்கும் பெண்கள், அவர்கள் மனதில் வென்றதோடு, அந்த அணியையும் விஜய் எப்படி வெல்ல வைக்கின்றார் என்பதே மீதிக்கதை.
விஜய்..விஜய்..விஜய் மட்டும் தான், அவர் ஒருவரை நம்பி தான் படம் என்றாலும், இத்தனை நட்சத்திரங்கள் இருந்தும் விஜய் மட்டுமே தான் முழுப்படத்தையும் தோளில் சுமக்கின்றார். ஆட்டம், பாட்டம் என்று ஜாலியாகவும் சரி, தன் புல்லிங்கோ முன்னேற வேண்டும் என்று கத்தியை எடுத்த ராயப்பனாகவும் சரி தொட்டதெல்லாம் கோல் தான்.
ஆனால், ராயப்பன் கதாபாத்திரம் அப்பாவாக இல்லாமல் அண்ணனாக காட்டியிருந்தால் இன்னும் தூளாக இருந்திருக்கும்.
படம் பெண்களுக்கு முக்கியத்துவம் கொண்டது, சிங்கப்பெண்ணே பாடல் எல்லாம் பட்டித்தொட்டியெல்லாம் ஹிட் அடித்தாலும் , படத்தில் எமோஷனலை தந்துள்ளது .
படத்தில் தன்னை கோச்சாக ஏற்றுக்கொள்ள விஜய் போடும் போட்டி, ஆசிட் அடிக்க பெண்ணிடம் பேசும் காட்சிகள், கிளைமேக்ஸில் தன் அணியை திட்டி வெறுப்பேற்றுவது, அதிலும் அந்த குண்டம்மா விஷயம் என இரண்டாம் பாதி முழுவதும் கைத்தட்டலுக்கு குறைவில்லாத காட்சிகள். இவை முதல் பாதியிலும் இருந்திருக்கலாம்.படத்தில் புட்பால் காட்சிகள் சுவாரஸ்யமாக இருக்கின்றது .
படத்தின் மிகப்பெரிய பலம் விஷ்ணுவின் ஒளிப்பதிவு, செம்ம கலர்புல் காட்சிகள், ரகுமானின் பின்னணி இசை காட்சிக்கு காட்சி சூப்பர். ரூபன் இன்னும் கொஞ்சம் படத்தை குறைத்திருக்கலாம் .
மொத்தத்தில் பிகில் விசில் போட வைக்கிறது .